prakash raj talk about farm laws repeal

Advertisment

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (19.11.2021) அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு பலரும்தங்களின் ஆதரவையும் கருத்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c130d91d-0039-464a-9977-ac187158dc1f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_57.jpg" />

அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எனது தேசத்தைச் சேர்ந்த அயராது போராடும் விவசாயிகள் மன்னரை மண்டியிட வைத்துள்ளனர்" எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில்ட்ரெண்டாகிவருகிறது.

Advertisment